புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவேகொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கருப்பம் பாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 53 வயது ஆண், 29 வயது பெண், 32 வயது ஆண், அன பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண், ராமானுரை சேர்ந்த 23 வயது பெண், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 64 வயது ஆண் மற்றும் 57 வயது பெண். எபேசேமங்கியை சேர்ந்த 36 வயது ஆண், பசுபதி பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, குளித்தலையை சேர்ந்த 22 வயது பெண், கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த 49 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 58 வயது ஆண், 49 வயது ஆண், வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த 59 வயது பெண், ஆண்டாங் கோவிலை சேர்ந்த 53 வயது பெண் உள்பட 18 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.