விஷம் குடித்து முதியவர் சாவு

விஷம் குடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-11 17:04 GMT
கிருஷ்ணராயபுரம்
மாயனூர் அருகே உள்ள சித்தலவாய் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). கூலி தொழிலாளியான, இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சண்முகம் கடந்த 9-ந்தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகம் மனைவி அஞ்சலகம் கொடுத்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்