தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள்

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-11 16:58 GMT
கீழக்கரை, 
கீழக்கரை நகருக்குள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். கீழக்கரை நகருக்குள் அதிக மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின் றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் குறுக்கே செல்வ தால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மாட்டின் மீது மோதி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தெருக்களில் போடப் பட்ட குப்பைகளை உண்பதாலும் வீதிகளில் அதிகம் சாணம் போடுவதாலும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். முந்தைய காலங்களில் மாடுகள் நட மாட்டம் இருந்தால் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை கட்டி வைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதித்து வந்தனர். தற்போது அதுபோன்ற அபராதம் விதிக் காததால் மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று சமூக ஆர்வ லர்கள் கூறுகின்றனர்.மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்கு நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் மாடு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்