செல்போனில் வீடியோ பதிவு செய்து இளம்பெண் தற்கொலை

காதலன் பேசுவதை தவிர்த்ததால் செல்போனில் வீடியோ பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-11 16:45 GMT
கோத்தகிரி,

தஞ்சை மாவட்டம் உமையாள்புரத்தில் உள்ள தச்சர் தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 23). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இதற்கிடையில் புவனேஸ்வரி தனது சொந்த ஊரில் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்கள் 2 பேரும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்கொலை

இந்த நிலையில் கோத்தகிரியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் புவனேஸ்வரியிடம் பேசுவதை அந்த வாலிபர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை செல்போனில் ‘பிளாக்’ செய்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்வதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து இருக்கிறார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோத்தகிரி போலீசார் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்