மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் மூட்டை பூண்டு விற்பனைக்கு வந்தது
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் மூட்டை பூண்டு விற்பனைக்கு வந்தது. அதன் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் மூட்டை பூண்டு விற்பனைக்கு வந்தது. அதன் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பூண்டு மார்க்கெட்
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் பூண்டு சாகுபடி செய்து உள்ளனர். இந்த பூண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இங்குள்ள மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஏலம் நடந்து வருகிறது.
அதன்படி நடந்த ஏலத்துக்கு நீலகிரி மாவட்டம் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து 5 ஆயிரம் மூட்டை பூண்டுகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
கடந்த வாரத்தைவிட இந்த வாரத்தில் பூண்டு வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
விலை குறைவு
இருந்தபோதிலும் பூண்டு விலை உயராமல் குறைந்தே காணப்பட்டது. நீலகிரி பூண்டு கிலோ ரூ.20 முதல் ரூ.100 வரை விற்பனையானது.
வெளிமாநில பூண்டு ரூ.130 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட இந்த வாரத்தில் நடந்த ஏலத்தில் பூண்டு விலை குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குவித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் நடந்த ஏலத்தில் பூண்டு கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.140 வரை விற்பனையானது.
அதுபோன்று 8 ஆயிரம் மூட்டை விற்பனைக்காக வந்து இருந்தது. ஆனால் இ்ந்த ஏலத்தில் 5 ஆயிரம் மூட்டைகளே விற்பனைக்கு வந்து இருந்தாலும் அதன் விலை குறைந்து இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.