குமரலிங்கம் பகுதியில் தென்னையுடன் கலப்புப்பயிராக பாக்கு மரங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரலிங்கம் பகுதியில் தென்னையுடன் கலப்புப்பயிராக பாக்கு மரங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் தென்னையுடன் கலப்புப்பயிராக பாக்கு மரங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னை சாகுபடி
உடுமலை, குடிமங்கலம், குமரலிங்கம் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.தென்னை மரங்களிலிருந்து தேங்காய், இளநீர் போன்றவை மூலம் நிலையான வருமானம் கிடைத்து வருகிறது.இருந்தாலும் சமீப காலங்களாக தென்னை மரங்களிடையே ஊடுபயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதற்கு கூடுதல் வருமானம் என்பது மட்டுமே காரணமாக இருப்பதில்லை.ஊடுபயிர் சாகுபடியின் மூலம் பிரதான பயிருக்கு பல நன்மைகள் கிடைப்பதை அனுபவம் மூலம் அறிந்த அனுபவ விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டலைப் பின்பற்றியே ஊடுபயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதேநேரத்தில் குமரலிங்கம் பகுதியில் தென்னையில் கலப்பு பயிராக பாக்கு சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை மரங்களை விட பாக்கு மரங்களுக்கு தண்ணீர் அதிக அளவு தேவை என்பதால் நல்ல நீராதாரம் மற்றும் பாசன வசதி உள்ள பகுதிகளிலேயே பாக்கு சாகுபடி செய்ய முடியும்.
பராமரிப்பு குறைவு
பாக்கு மரங்களைப் பொறுத்தவரை நடவு செய்த 5 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். அதேநேரத்தில் 50 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்க முடியும். தென்னை மரங்களில் 40 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை மேற்கொள்ள முடியும். ஆனால் பாக்கு மரங்களில் ஆண்டுக்கு 5 அல்லது 6 முறை மட்டுமே மகசூல் எடுக்க முடியும். ஆனாலும் பாக்கு சாகுபடியில் பராமரிப்பு குறைவு என்பதுடன் நல்ல விலையும் கிடைக்கும் என்ற அடிப்படையில் தென்னையில் கலப்புப்பயிராக பாக்கு சாகுபடி மேற்கொண்டுள்ளோம். பொதுவாக இந்த பகுதிகளில் மங்களா, சுப மங்களா, மோஹித், தீர்த்தஹல்லி குட்டை போன்ற ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. பாக்கு மரங்களை கலப்புப் பயிராக மட்டுமல்லாமல் ஊடுபயிர் மற்றும் தனிப் பயிராகவும் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.