கார் மோதி வாலிபர் படுகாயம்

கார் மோதி வாலிபர் படுகாயம்.

Update: 2021-04-11 15:42 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள தேவாரம் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் வில்லியம்(வயது 30). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் கட்டபெட்டு அருகே உள்ள மைனலைக்கு சென்றார். வெஸ்ட் புரூக் பகுதியில் உள்ள குறுகிய வளைவில் திரும்பியபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் வில்லியம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்