உடுமலை மத்திய பஸ் நிலையத்தில்பயணிகள், கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல்பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏற்கின்றனர்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில்பயணிகள், கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல்பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏற்கின்றனர்

Update: 2021-04-11 15:37 GMT
உடுமலை
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில்பயணிகள், கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல்பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏற்கின்றனர்.இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
கொரோனா வைரஸ்
இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அதனால் அரசு கட்டுப்பாடுகளை விதித்தும் உள்ளது.இந்த கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உடுமலையில் முககவசம் அணியாமல் வெளியில் வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
சிலர் பெயரளவிற்கு, அதாவது வாய்க்கு கீழ்பகுதி வரை மட்டுமே முககவசம் அணிந்து செல்கின்றனர். பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் சமூக இடைவெளிகடைபிடிக்கப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. கூட்டத்திற்குள் செல்லாமல் ஒதுங்கியிருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அரசின் அறிவுரைப்படி மூக்குக்கு மேல்பகுதி வரை முககவசம் அணிய வேண்டும் என்பதை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
பஸ்களில் கூட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஒருசில வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. டவுன்பஸ்கள் நீண்ட நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் வரும்போது, அந்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், பஸ் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறுகிறார்கள். அப்போது பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகளும், பஸ்சை விட்டுகீழே இறங்க முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் பஸ்நிலையத்தில் பஸ் ஏற கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் சில வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. 

மேலும் செய்திகள்