கே.வி.குப்பம்; தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
கே.வி.குப்பம் அருகே தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் கிராமத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரகாஷ் பொதுமக்கள் மீது தடி அடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டித்து குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்னங்குப்பம் ஆலமரம் பஸ் நிறுத்தம் எதிரில் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 100-க்கு மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் பொறுப்பாளர் கோபி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எதிராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.