மோகனூர் அருகே சருவ மலையில் திடீர் தீ
சருவ மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள அணியாபுரம் பகுதியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் சருவ மலை உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று திடீரென சருவ மலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் புற்கள், மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து நடந்த இடத்தை வனவர் அருள், வனக்குழு தலைவர் மணி ஆகியோர் பார்வையிட்டனர்.