கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று 501 பேர் பாதிக்கப்பட்டனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று 501 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை 62 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 250 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினார்கள். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்
தற்போது 2 ஆயிரத்து 174 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 327 பேர் ஆவார்கள்.
இதில் அதிகபட்சமாக கோவை இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரியில் 591 பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் 153 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 134 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று 9 ஆயிரத்து 89 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரத்து 827 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.