முககவசம் அணியாமல் வியாபாரம் நடத்தியதால் ஜவுளிக்கடைக்கு சீல்-உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

முககவசம் அணியாமல் வியாபாரம் நடத்தியதால் ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அதன் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-04-10 23:11 GMT
பெருந்துறை
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் வணிக நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இந்தநிலையில் பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று பெருந்துறை ஈரோடு ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு ஜவுளிக்கடையில் அதன் உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் முக கவசம் அணிந்திருக்கவில்லை. இதையடுத்து ஜவுளிக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் அதன் உாிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.

மேலும் செய்திகள்