வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
சங்ககிரி, எடப்பாடி ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம்:
சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதியில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சங்ககிரியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.