மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
திண்டுக்கல்லில் மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் பெரியசாமி உள்பட அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் செயல்திறன் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.