மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2021-04-10 20:29 GMT
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. புகழ்பெற்ற இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக திருவிழா தேதி கோவில் நிர்வாகத்தினரால் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 12-ந் தேதி (திங்கட்கிழமை) திருவிழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோவில் நிர்வாகம் சாா்பில் 9-ந் தேதி இரவு புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்