ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது
மேலூர்
மேலூர் அருகே உள்ள பட்டூர் முத்துக்கருப்பன்பட்டியை சேர்ந்தவர் சத்யா(வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக மேலூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். புதுசுக்காம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் வரும்போது பிரசவ வலி அதிகமாகி சத்யா துடி துடித்தார். இதையடுத்து ஆம்புலன்சை நிறுத்தி அதில் இருந்த மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர். பிரசவம் பார்த்த மருத்து உதவியாளர் விமலை கிராம மக்களும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் பாராட்டினர்.