இளையான்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழுவின் ஆணைப்படி நடைபெற்றது. இதில் இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமான எம்.சுனில் ராஜா தலைமையிலும், குழுவின் மூத்த உறுப்பினர் வக்கீல் கே.அண்ணாதுரை முன்னிலையிலும் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில் 21 வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டு வழக்காடப்பட்டது. இதில் 3 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு முடித்து வைக்கப்பட்டது. அமர்வில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா வழிமுறைகளின் படி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர்களும், பணியாளர்களும் செய்திருந்தனர்.