சிறப்பு மருத்துவ முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிறப்பு மருத்துவ முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2021-04-10 19:35 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆர்.சி.ஆதிமூலம் நடுநிலைப்பள்ளியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு நீதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டாஹரீஸ்தக்கர், திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அங்கு மருத்துவ முகாமிற்கு வந்தவர்களிடம் தங்கள் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர். முகாமில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்