மேட்டுப்பாளையம் அருகே லாரி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது

மேட்டுப்பாளையம் அருகே லாரி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-04-10 18:08 GMT
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே லாரி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

லாரி கண்ணாடி உடைப்பு

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் ரோடு விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 27), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மனு என்பவருக்கு சொந்தமான லாரியை வாடகைக்காக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள தனியார் மில்லுக்கு ஓட்டி வந்தார்.

பின்னர் தனியார் மில்லில் பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு, மீண்டும் கவுண்டம்பாளையத்திற்கு புறப்பட்டார். அப்போது லாரி மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரில் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் திடீரென லாரியை வழிமறித்து கல்வீசி தாக்கினர்.  இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
 
4 பேர் கைது

இதுகுறித்து டேவிட் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லாரியின் கண்ணாடியை உடைத்தது மேட்டுப்பாளையம் சுக்குகாபி கடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (29), கபீர் (19), வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டை சேர்ந்த அரவிந்த் (24), கூடுதுறை மலைப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.  பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்