விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி,
அரக்கோணம் அருகே சோகனூரில் நடந்த அரசியல் மோதலில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணத்தில் இரட்டை கொலை செய்தவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.