தாராபுரம் அருகே வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.

தாராபுரம் அருகே வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2021-04-10 16:50 GMT
தாராபுரம்
தாராபுரம் அருகே வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில்  வேன் டிரைவர் உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேன் சரக்கு வாகனம் மோதல்
திருச்சியில் இருந்து வாழைத்தார் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் தாராபுரம் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி வந்தது. இந்த வேனை பாலக்காட்டை சேர்ந்த  காஜா உசேன் ஓட்டி வந்தார். இந்த வேன் கரூர்-தாராபுரம் ரோட்டில் குளத்துப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. 
அப்போது எதிரே உடுமலையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம்  திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வாகனத்தை திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ராஜா  என்பவர் ஓட்டினார். 
டிரைவர் பலி
கண் இமைக்கும் நேரத்தில் வேனும், சரக்கு வாகனமும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் டிரைவரும், சரக்கு வாகன டிரைவரும் காயம் அடைந்தனர். விபத்தில் வேனின் கேபின் பகுதியும், சரக்கு வாகனத்தின் முன்பகுதியும்பலத்த சேதம்அடைந்தது. இதையடுத்து  2 டிரைவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 பின்னர் மேல் சிகிச்சைக்காக  காஜா உசேன்கேரளா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கேரளா செல்லும் வழியிலேயே காஜா உசேன் இறந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு வாகனத்தை ஓட்டிய டிரைவர் ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் செய்திகள்