பெருந்துறை அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

பெருந்துறை தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-09 22:50 GMT
பெருந்துறை
பெருந்துறை அருகே உள்ள சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராம். இறந்துவிட்டார். இவருடைய மனைவி தனம் (வயது 85). தனம் தனது மகன் குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தனம் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனினும் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த தனம், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை கண்டதும் குமார் ஓடிச்சென்று தனத்தை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தனம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்