ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிங்கம்புணரியில் ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-04-09 21:21 GMT
சிங்கம்புணரி,

பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து சிங்கம்புணரி சுந்தரம் நகர் மக்கள் மன்றத்தில் 45 வயது நிறைவுற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபீஷா பானு உத்தரவின் பேரில் டாக்டர் செந்தில்குமார், பரணிராஜன் ஆகியோர் தலைமையில் சிங்கம்புணரி அரிமா சங்க ்தலைவர் செல்வக்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதில் 45 வயது பூர்த்தியான ஆண்கள், பெண்களுக்கு ஆதார் கார்டை காண்பித்து தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்