ஜவுளிக்கடையில் ரூ.5½ லட்சம் மோசடி

காரைக்குடியில் ஜவுளிக்கடையில் ரூ.5½ லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான மேலாளரை போலீசார் தேடுகிறார்கள்.

Update: 2021-04-09 20:06 GMT
காரைக்குடி,

காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்தவர் வடமலைமுத்து. இவர் சவுதியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர் காரைக்குடியில் 100 அடி சாலையில் ஒரு ஜவுளிக்கடை ஆரம்பித்தார்.அதற்கு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மேட்டுக்கடைபகுதியை சேர்ந்த செல்வகணபதி என்பவரை மேலாளராக நியமித்து விட்டு, இவர் சவுதி சென்றார்.கொரோனா காலம் என்பதால் உடனடியாக அவரால் திரும்ப இயலவில்லை. 4 மாத காலம் கழித்து காரைக்குடி திரும்பினார். அதன்பின்னர் ஜவுளிக்கடைக்கு சென்று கணக்குகளை பார்த்த போது அதில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆடிட்டர் மூலம் கணக்குகளை சரிபார்த்தபோது ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 207 ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலாளர் செல்வகணபதியிடம் கேட்கமுயன்றபோது அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செல்வகணபதி மீது மோசடி வழக்குபதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்