முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. அவை இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் பொது இடங்களில் சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் நின்று கொண்டு அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.