5 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனைகளில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.