மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-04-09 20:03 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் ஆயிபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் சிலர் மாட்டு வண்டிகள் ஓட்டி வந்தனர். கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் மாடுகளை அவிழ்த்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், அந்த வண்டிகளில் பார்த்தபோது, அவற்றில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்,  தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த ராசு மகன் செல்வகுமார் (வயது 32), முத்துவீரன் மகன் சங்கர் (35), செல்லதுரை (40), அமிர்தராயன்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (54) ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்