மணல் அள்ளிய 2 பேர் கைது

மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-04-09 19:35 GMT
சோழவந்தான்
சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைகை ஆற்றில் இருந்து சாக்குகளில் மணல் அள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் மணல் மூடைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை செய்தனர். இதில் சோழவந்தானை சேர்ந்த ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் திருடிய 18 மணல் மூடைகள், பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்