சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 5 பேர் படுகாயம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-09 19:03 GMT
கொள்ளிடம் டோல்கேட்
பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேதுநாராயணன் (வயது 56). இவர் தனது மனைவி அனுராதாவுடன் (53) காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை சேதுநாராயணன் ஓட்ட, அவருடைய மனைவி அருகில் அமர்ந்து இருந்தார். திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து பழுர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சமயபுரத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
5 பேர் படுகாயம்
இதில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (29), அருண்குமார் (17), புத்தூர் கள்ளாங்காடு பகுதியை சேர்ந்த வைசாலினி (24), கருப்பாயி (50), பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (45) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நம்பர்-1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சேதுநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்