காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த உச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் காரிமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சிவகுமார் இருந்தபோது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி மற்றும் அதன் டிரைவரை தேடி வருகிறார்கள்.