கொரோனா எதிரொலி: அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழா நிறுத்தம் தண்டோரா போட்டு தெரிவிப்பு

அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்

Update: 2021-04-09 18:31 GMT
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மற்றும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள், அலங்கார சேவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் நல்லம்பள்ளி மற்றும் அதியமான்கோட்டை அதன் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று 2-ம் கட்ட பரவல் எதிரொலியாக, அரசு கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று அதியமான்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் முன்னிலையில், ஊராட்சி பணியாளர்கள் தண்டோரா போட்டு அரசு விதித்துள்ள உத்தரவை தெரிவித்தனர். திருவிழா நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதை தண்டோரா மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்