ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-04-08 19:30 GMT
ஸ்ரீரங்கம், 
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று வந்தார். அவரை பா.ஜனதா கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளர் முரளிதரன், மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன் மற்றும் பா.ஜனதா கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர் ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக கருடமண்டபம் சென்றடைந்தார். 

அங்கு கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து ஆரியபட்டாள் வாசல் வழியாக தங்ககொடிமரத்தை வழிபட்டு விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். அதன்பின் தாயார் சன்னதி சென்று தரிசனம் செய்து விட்டு ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்