சிவகிரி அருகே ரூ.54 ஆயிரம் பறிமுதல்

சிவகிரி அருகே ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டத.

Update: 2021-04-02 20:06 GMT
சிவகிரி:

சிவகிரி அருகே தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொட்டிச்சி மலை ஆற்று பாலத்தின் அருகே பறக்கும் படை அதிகாரியும், பொதுப்பணித்துறை ஜூனியர் என்ஜினீயருமான தென்காசி சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். 

அப்போது கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் இருந்து பழனி நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், சுகுமார் என்பதும், அவரிடம் ரூ.54,300 இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது பழனி கோவிலுக்கு உண்டியலில் பணம் செலுத்த வந்ததாக தெரிவித்தார். ஆனால் ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்