சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-04-02 18:27 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் டவுன் பாரதி ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் அமைந்துள்ள பழமையான வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சிதிலமடைந்து இருந்தது. இதையடுத்து பக்தர்கள் முயற்சியால் புதிதாக துர்க்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, காலபைரவர், சீரடி சாய்பாபா, கல்யாண விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு விக்ரஹரகங்கள்அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கடந்த 31-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. 
முதல் கால யாக வேள்வி பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் 2-ம் கால பூஜை பூர்ணாஹுதி மகாதீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து கும்பாபிஷேக விழாவையொட்டி கலசங்களில் புனிதநீர் அடங்கிய குடங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்று புனித கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்து விநாயகர் கோபுரம், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி  கோவில் கோபுர கலசங்களில் பூஜைகள் செய்யப்பட்டு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பினார்கள். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்