கோவையில் 277 பேருக்கு கொரோனா
கோவையில் நேற்று 277 பேருக்கு கொரோனா உறுதியானது.
கோவை,
கோவையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்ட பட்டியலில் கோவையில் 277 பேருக்கு கொரோனா உறுதியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 529 ஆக உயர்ந்து உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 136 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில், இதுவரை 56,972 பேர் குணமடைந்து உள்ளனர்.
தற்போது, 1,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீதிக்கு சீல் வைப்பு
அன்னூர் ரங்கையன் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கூத்தாண்டவர் கோவில் வீதியில் இருந்து ரங்கையின் வீதிக்கு செல்லும் பாதைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் தென்னம்பாளையம் ரோடு, குருக்கிளையம்பாளை யத்தில் 3 பேருக்கும், பசூர், மூலக்குரும்பாளையம் ஆகிய பகுதியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.