குப்பை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

குப்பை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

Update: 2021-04-02 18:07 GMT
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மூலக்காடு என்ற இடத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஊராட்சி பகுதிகளில் சேகரித்த குப்பைகளை கொட்ட லாரி சென்றபோது, அங்கிருந்த சிலர், இங்கு குப்பை கொட்டக்கூடாது என கூறி லாரியை சிறைப்பிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஊராட்சி நிர்வாகத்தினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இங்கு குப்பைகளை கொட்டுவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களில், உள்ள கிணற்று நீர் மாசடைகிறது. குப்பைகள் காற்றில் பறந்து விவசாய நிலங்களில் விழுகின்றன. எனவே இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்றனர். 
இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி நிர்வாகத்தினர். குப்பைகள் கொட்ட விரைவில் மாற்று ஏற்பாடு செய்கிறோம், என்று கூறியதை அடுத்து அவர்கள் லாரியை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்