ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திருப்பூரில் வீடு, வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.5½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-02 17:47 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் வீடு, வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.5½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் கடை ஊழியர்
திருப்பூர் பிச்சம்பாளையம் வள்ளலார் வீதியில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் வீடு, வீடாக ஸ்மார்ட் ரேஷன் கார்டை சரிபார்ப்பது போல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பறக்கும்படை அதிகாரியான மாரியப்பன் தலைமையிலான குழுவினர் உடனடியாக பிச்சம்பாளையம் வள்ளலார்வீதியில் உள்ள சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியரான சுமதி (வயது 35) வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளும் வந்து சோதனை மேற்கொண்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.5½ லட்சம் பறிமுதல் 
சுமதி ஸ்ரீநகர் மகாவிஷ்ணு நகரில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக உள்ளார். இவருடைய கணவர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சியின் கிளை செயலாளராக இருக்கிறார். மாலை 5 மணி முதல் இரவு வரை தொடர்ந்து விசாரணை நடந்தது. 
இந்த சோதனை குறித்து பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் கூறும்போது  சோதனை முடிவில் வீட்டில்  இருந்த ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் இ்ல்லாததால் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்