அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிள்

நிலக்கோட்டை அருகே அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-02 16:08 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூசை. 

இவருடைய தோட்டத்துக்கு அருகே நேற்று முன்தினம் காலையில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்றது. 

இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலக்கோட்டை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

 இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். 

பின்னர் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்