தீக்குளித்து பெண் தற்கொலை

மதுரை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-02 14:34 GMT
அலங்காநல்லூர்,ஏப்
மதுரை பாலமேட்டைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 25). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளவரசி (20). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளவரசி கடந்த மார்ச் 30-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து எதற்காக இளவரசி தீக்குளித்து தற்கொலை செயது கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்