சுற்றுச்சூழலை மேம்படுத்த சாலையோரங்களில் மரங்கள் நடப்படும் - திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

சுற்றுச்சூழலை மேம்படுத்த சாலையோரங்களில் மரங்கள் நடப்படும் என திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி அளித்தார்.

Update: 2021-04-02 10:06 GMT
திருச்சி, 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட சூப்பர் பஜார், சிங்கார தோப்பு பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. ரோடு, அல்லிமால் தெரு மற்றும் ்பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது கடும் வெயிலில் மக்கள் அவதிப் படுவதை பார்த்த இனிகோ இருதயராஜ் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெருநகரங்களில் உள்ளது போன்று சாலையோரங்க ளில் நிழல் தரும் மரங்கள் நடப்படும். இதன் மூலம் வெயிலில் இருந்து மக்கள் தப்பிப்பதுடன் சுற்றுச்சூழ லும் மேம்படும் என்றார். 
தொடர்ந்து பெரியசௌக், சின்ன செளக், பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், நான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி திருச்சி காந்தி மார்க்கெட் நவீனப்படுத்தப்படும் இன்னும் 100 ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படும் திருச்சி மாநகர போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திட்டம் தயாரித்து உள்ளேன் மக்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் திருச்சி நகரை சீர்மிகு நகரமாக மாற்றி காட்டுவேன் என கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பாலக்கரை பகுதி செயலா ளர் மண்டிசேகர் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்