கோவை மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்து உள்ளது.

Update: 2021-04-02 07:16 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு

சுகாதார துறை வெளியிட்டுள்ள பட்டியல் படி கோவை மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 121 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இவர்களுடன் சேர்த்து கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 1,717 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் இதுவரை 694 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

தடுப்பூசி

கோவையில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 618 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்று அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் 6,018 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

 இதையடுத்து மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் செய்திகள்