ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது.
வெயிலின் தாக்கம்
ஈரோட்டில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 110 டிகிரி நெருங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மாலையில் சிறிது நேரம் பலத்த காற்று வீசியது.
மழை பெய்தது
இந்தநிலையில் இரவு 11 மணிஅளவில் திடீரென மழை பெய்தது. ஈரோடு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஆனால் சுமார் 15 நிமிடங்களே பெய்த மழை பொதுமக்களை ஏமாற்றிவிட்டு சென்றது.