ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.99 ஆயிரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.99 ஆயிரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்,ஏப்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதுப்பட்டி விலக்கு அருகே உதவி பொறியாளர் தீபக் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுடி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த பாண்டியராஜ் என்பவரிடம் விசாரித்தபோது அவர் கடன் வழங்கும் நிதிநிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறினார். மேலும் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99¼ லட்சம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.