பேரையூர்,
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் அத்திபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவர் போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.