ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு ஆண்டாள் கோவிலில் 108 மலர்களால் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது. மல்லி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட 108 வகையான மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாளும், ெரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். புஷ்ப யாகத்தை காண விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.