சிப்காட் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சிப்காட் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ராணிப்பேட்டை
சிப்காட். பேஸ்-3 தொழிற்பேட்டை கத்தாரிகுப்பம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் புகை வருவதாக கூறி பொதுமக்கள் நேற்று லாலாப்பேட்டை - பொன்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுக்களிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் லாலாப்பேட்டை -பொன்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.