மேல்மலையனூர்,
அவலூர்பேட்டை வைசியர் தெருவில் வாலிபர் ஒருவர், எம்.பி.பி.எஸ். படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவின்பேரில் செஞ்சி அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பிரசாத், திண்டிவனம் மருத்துவ ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் நேரில் சென்று குறிப்பிட்ட அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது எதப்பட்டு கிராமத்தை சேர்ந்த அப்துல்வகாப் மகன் முபாரக் (வயது 34) என்பவர், டி.பார்ம் மற்றும் டி.எம்.எல்.டி. படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டரான முபாரக்கை கைது செய்தனர்.