4 பேருக்கு கொரோனா

சிங்கம்புணரி பகுதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-01 17:43 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி என்ற பகுதியில் 32 வயது பெண்ணுக்கும், 11 வயது சிறுவனுக்கும், சிங்கம்புணரி நகர்புறத்தில் 66 வயது முதியவர், 33 பெண்ணுக்கும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் நபிஷாபானு கூறும் போது, சிங்கம்புணரி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்