அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் திருச்சுழி தொகுதியில் விவசாயம் செழிக்கும் பகுதியாக மாறும் - அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகர் பேச்சு
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் திருச்சுழி தொகுதியில் விவசாயம் செழிக்கும் பகுதியாக மாறும் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகர் பேசினார்.
திருச்சுழி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் காரியாபட்டி ஒன்றியப் பகுதியான வண்ணாங்குண்டு, கரியநேந்தல், கணக்கனேந்தல், தண்டியனேந்தல், உள்பட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் பேசியதாவது, மழை காலங்களில் குண்டாற்றில் செல்லும் தண்ணீர் வீணாக சென்று வருவதை தடுக்கும் விதத்தில் குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பணை கட்டுவதன் மூலம் கரியனேந்தல்,கணக்கனேந்தல் திருச்சுழி, தமிழ் பாடி, பந்தனேந்தல் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் நிரம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செழிக்கும். மேலும் கிராம பகுதிகளில் அம்மா மினிகிளினிக்குகள் ஏற்படுத்தி பொதுமக்கள் உடனடியாக சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் மூலம் திருச்சுழி பகுதியில் உள்ள விவசாயம் மிகவும் செழிப்படையும் இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். அ.தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியில் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம் குடும்பப் பெண்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை, வாஷிங் மெஷின் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது அ.தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது எனவே பொதுமக்கள் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
காரியாபட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ் ,தோப்பூர் முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பாலுச்சாமி ,ஒன்றிய அவைத்தலைவர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆவியூர் ரமேஷ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மனோகரன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.