பொள்ளாச்சி வால்பாறை தொகுதியில் 1372 பேர் தபால் வாக்குப்பதிவு
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் 1,372 பேர் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் 1,372 பேர் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 4,682 பேரும், 1,756 மாற்றுத்திறனாளிகள் சேர்த்து மொத்தம் 6,438 பேர் உள்ளனர்.
இதேபோன்று வால்பாறை தொகுதியில் முதியவர்கள் 3,185 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,512 பேரும் சேர்த்து 4,695 பேர் உள்ளனர்.
1,372 பேர் வாக்களித்தனர்
இதில் பொள்ளாச்சியில் 808 பேரும், வால்பாறையில் 641 பேரும் விருப்பம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து 2 நாட்கள் தொடர்ந்து வீடுகளுக்கு நேரடியாக சென்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ரகசிய வாக்குப்பதிவு நடத்தினர்.
வாக்காளர்கள் வாக்கை பதிவு செய்து சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வாக்கு சீட்டை செலுத்தினர்.
பொள்ளாச்சி தொகுதியில் 774 பேரும், வால்பாறை தொகுதியில் 598 பேரும் சேர்த்து மொத்தம் 1,372 பேர் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.
இறப்பு மற்றும் வெளியூர் சென்ற காரணங்களால் மற்றவர்கள் வாக்குப்பதிவு செய்யவில்லை என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.